Availability: In Stock

இஸ்லாமிய வெறுப்புத் தொழில்: வலதுசாரிகள் முஸ்லிம் அச்சத்தை உற்பத்தி செய்வது எப்படி

Original price was: ₨ 1,980.0.Current price is: ₨ 1,782.0.

Already sold: 0/1
Category:

Description

– நாதன் லீன்

அச்சம் என்பது நல்ல விலைக்குப் போகும் ஒரு சரக்கு; மதத் தலைவர்கள், பண்டிதர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர், இணையகுடிமக்கள், கூவி விற்கும் அறிவுஜீவிகள் கொண்ட வலதுசாரி ஊழியக்காரர்கள் நிரம்பிய இஸ்லாமிய வெறுப்புத் தொழில்துறைக்கு அது நன்றாகவே தெரியும். அவர்கள் முஸ்லிம்கள்தான் விரோதி என்று உடனிருக்கும் மக்களை நம்ப வைப்பதற்காகப் பல ஆண்டுகளாக திரைக்குப் பின்னால் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும் செல்வத்திற்காகவும் புகழுக்காகவும் 9/11 ஆவிகளைத் தோண்டி எடுத்து, வெகுமக்களின் கண்களுக்கு முன்னே ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களின் திட்டம் இப்போது நன்றாக வேலை செய்கிறது.

அமெரிக்கா, அய்ரோப்பா என உலகெங்கும் அடித்துச் செல்லும் இஸ்லாமிய வெறுப்பின் பேரலை இயற்கையாக நிகழும் ஒன்றல்ல. இது இஸ்லாமிய வெறுப்பு ஊழியர்களால் உருவாக்கப்பட்ட சிறந்த வடிவமைப்பு.அண்மைக் காலங்களில் முஸ்லிம்கள் நடத்தும் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறைந்திருக்கின்றன. ஆனாலும் முஸ்லிம் எதிர்ப்பு முற்சாய்வுகள் புதிய உச்சங்களை அடைந்திருக்கின்றன. இஸ்லாமிய வெறுப்புத் தொழிலகங்கள் தயாரித்திருக்கும் அச்சத்தின் பிடி சில மக்கள் கூட்டங்கள் மீது அவ்வளவு கடுமையாக இருப்பதால், நினைத்துப் பார்க்கவும் முடியாததைச் செய்வதற்கு அவர்களைத் தூண்டுகிறது. ஆற்றல்மிக்க இந்த நூல் அரக்கர்களைத் தயாரிக்கும் இருண்ட உலகை ஆராய்கிறது.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “இஸ்லாமிய வெறுப்புத் தொழில்: வலதுசாரிகள் முஸ்லிம் அச்சத்தை உற்பத்தி செய்வது எப்படி”

Your email address will not be published. Required fields are marked *