Description
ஆசிரியர் குறிப்பு
முனைவர் தெ. வாசுகி எம்.ஏ, (தமிழ்), எம்ஃபில், பி.எட். பிஎச்.டி. எம்.ஏ (மகளிரியல்) தமிழ்த்துறைத் தலைவராக நாகப்பட்டினம் ஆ.து.ம. மகளிர் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இதுவரை நான்கு நூல்கள் வெளியிட்டு உள்ளார். தேசியக் கருத்தரங்கம், பன்னாட்டுக் கருத்தரங்கங்களில் 110க்கு மேற்பட்ட கட்டுரைகளை வழங்கியவர். ஏழு முனைவர் பட்ட ஆய்வாளர்களை உருவாக்கியுள்ளார். 17 வானொலி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு சொற்பொழிவாற்றி உள்ளார். சிங்கப்பூர், மலேசியா, துபாய், அபுதாபி, சார்ஜா, அஜ்மன், இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்று பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டுள்ளார். 2010 ஆம் ஆண்டு கோவையில் கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற உலக செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். பாரதி செல்வர் விருது, கவிஞர் வாணிதாசன் விருது. தேசிய அம்பேத்கர் விருது, மங்கையர் மாமணி, செந்தமிழ் ஆய்வுத்திலகம், இலக்கியச் சுடர் செந்தமிழ் திலகம், செந்தமிழ் கோ, நற்றமிழ் நாவுக்கரசி உள்பட 20 விருதுகளைப் பெற்ற விருதாளர். நாட்டுநலப்பணித் திட்ட போட்ராக்ட் சங்க, மகளிர் சங்க, கிராமத் தத்தெடுப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு சமூகத்தொண்டு ஆற்றிய பெருமைக்குரியவர்.
இவரது ‘பிரமாதம்’ (தேர்ந்தெடுக்கப்பெற்ற சிறுகதைகள்) நூல் மாணவிகளை நல்வழிப்படுத்துபவையாக உள்ளது.
முனைவர் மலர்விழி மாதேஸ்வரன்
தமிழ்த்துறைத் தலைவர் ஸ்ரீ வாசவி கல்லூரி, ஈரோடு.







Reviews
There are no reviews yet.