Description
எல்லைகள், கோடுகள், நிலப்பரப்புகள் எவ்வளவுதான் கடந்தாலும் மனித மனம் ஒரே மாதிரிதான் சிந்திக்கிறது. குதூகலிக்கிறது. துக்கப்படுகிறது.
ஒடிசாவிலிருந்து வந்த ராஜ்யபர்தன் தன் கதைகளின் வழி நம் வீட்டு வாசலில், நடுமுற்றத்தில், படுக்கையறையின் யாருமில்லாத தனிமையில் நம்மை நமக்குள் பேச வைக்கிறார். நம்முடைய வாழ்வின் மீதான அக்கறை, அன்பு, காதல், துரோகம், கழிவிரக்கம் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்குகிறார்.
அவரின் கதைகள் வழி நாம் பேசும் ஒவ்வொரு சொல்லும் இதயத்தின் அடியாழத்தின் நீரூற்றிலிருந்து ஈரத்தைக் கொண்டுவருகிறதாவென நாமே நியாயத் தராசில் நின்று பார்த்துக் கொள்ளலாம்.
ஒவ்வொரு வாழ்விற்கான இரண்டு பக்கங்களிலிருந்தும் அதன் நியாயங்களிலிருந்தும் அவர் பேசும்போது அடுத்த நொடி எடுத்து வைக்க முடியாமல் திகைத்துத்தான் போகிறோம்.
வாழ்வு நமக்கு கையளித்திருக்கிற ஏற்றத்தையும் தாழ்வையும் கண் மூடி, தலை வணங்கி ஏற்றுக்கொள்ள செய்யும் அவருடைய கதைகள் தமிழ் சூழலில் வரவேண்டிய ஒன்று.
பத்மஜா ஓடியாவிலிருந்து, ஆங்கிலத்திலிருந்து, தமிழுக்குக் கொண்டுவந்தாலும் பல நாள் மனதின் அடியாழத்தில் பாதுகாத்து நல்ல மொழி உணர்வோடு நமக்குத் தந்திருகிறார்.
கே.வி. ஷைலஜா







Reviews
There are no reviews yet.