Description
பங்கு சந்தை படுகுழிகளும் பாதுகாப்பு வழிகளும் பங்குச் சந்தைகளின் உலகம் பரவசமூட்டும் ஒரு விஷயம். அதே அளவுக்கு சிக்கலானதும் கூட. அதை மேலும் சிக்கலாக்கும் எந்தவொரு intelligent fool ஐயும் விட செல்லமுத்து குப்புசாமி touch of genius உடன் இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கான கூடுதல் தகுதி படைத்தவராகிறார் எங்கோ உச்சாணியில் அமர்ந்து கொண்டு காற்றில் வரைபடம் போடுவதற்குப் பதிலாக பகுத்தறியும் நோக்கில் பங்குச் சந்தையை அணுகும் சூட்சுமம் அவருக்குக் கைவருகிறது.
உங்கள் கையிலிருக்கும் இந்தப் புத்தகம் தொடர்ச்சியாகக் கற்கும் வேட்கையுள்ள ஒரு நிபுணரால் கற்றுக்கொள்ள விரும்புவோரையும், வல்லுனர்களையும் மனதில் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதிலுள்ள விஷயங்களை உள்வாங்குவதன் மூலம் நீங்கள் எடுக்கும் முடிவுகள் வலுவான பங்கு முதலீட்டுக் கொள்கைக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து, அதன் மூலம், நிம்மதியான எதிர்காலத்துக்கும், நிதிச் சிக்கல்களிலிருந்து முழுமையான விடுதலைக்கும் வழி வகுக்கும்.







Reviews
There are no reviews yet.