Availability: In Stock

இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள்.

Original price was: ₨ 1,000.0.Current price is: ₨ 900.0.

Already sold: 0/2
Category:

Description

இந்நூல் பாரம்பரிய விவசாயத்தை காலம்காலமாகக் கைக்கொள்வதனாலும் விவசாயக் கொள்கையை சிறப்பாக நடைமுறைப்படுத்தாததினாலும் இலங்கையின் விவசாயத்துறை எவ்வாறு வீழ்ச்சி கண்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி நவீன விவசாய தொழில்நுட்பங்களை இறுக்கமான விவசாயக் கொள்கைகளுடன் நடைமுறைப்படுத்தி விவசாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய வழிவகைகளை முன்னிறுத்தி, பலதரப்பட்டவர்களும் வாசித்துப் பயன்பெறக் கூடியவாறும், தமிழ் மொழியில் விவசாயம் சார்ந்த நூல்கள் இல்லாத குறையைத் தீர்க்கும் வகையிலும் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் நமது விவசாயத்துறையைச் சார்ந்த இளம் சந்ததிக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

வளர்ந்துவரும் நாடுகளில் இருக்கும் பெரும்பாலான வேளாண் பெருமக்கள் இன்றும் தமது பாரம்பரிய விவசாய முறைகளையே கைக்கொண்டு வருகின்றனர். காரணம் அவர்களின் பட்டறிவு மற்றும் அனுபவ அறிவு, கல்வி அறிவிலும் அதிகம். ஆனால் இன்று நிலைமை வேறு. வளர்ச்சியடைந்த நாடுகள் வேகமான விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக பல்வேறுபட்ட நவீன தொழில்நுட்பங்களை வேளாண் துறைக்குள் புகுத்தி அதிக இலாபத்தைச் சம்பாதிக்கின்றன; அந் நாடுகள் தன்னிறைவையும் அடைந்துவிட்டன. எமது விவசாயிகளுக்கும் நவீன வேளாண் தொழில்நுட்ப அறிவை வழங்க வேண்டியது துறை சார்ந்த பேராசிரியர்களினதும் விவசாயத்துறை சார்ந்த நிறுவனங்களினதும் கடமையும் பொறுப்பும் ஆகும். இந் நூல் இத் தேவையை நிவர்த்தி செய்யும் விதமாக எழுதப்பட்டுள்ளது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள்.”

Your email address will not be published. Required fields are marked *