Description
மனம், எண்ணி எண்ணிச் சுகம் காணும் உலகத்திற்கும், எதார்த்தத்தில் அதற்கு ஏற்படும் காயங்களுக்கும் இடையே உள்ள முரணை இந்த கவிதைத் தொகுப்பு காட்ட முயற்சிக்கிறது. கவிதைக்கும் காதலுக்கும், தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் மிகவும் தீவிரமான நெருக்கம் உண்டு. காதல் கவிதைகள் சமுதாய நோக்கமற்றதாக இருப்பின், வெறும் உணர்ச்சிகளை மட்டும் கொட்டி நீர்த்துப் போய்விடுகிறது. இந்தக்குறை நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கை உணர்வுடன் கவிதை நம்மை அழைத்துச் செல்கிறது. அறிவு. உணர்வு என்ற இரண்டு தளங்களிலும், முழுமையான வாசக திருப்தியை நமக்கு வழங்குகிறது. இந்தக் கவிதைத் தொகுப்பை வாசிக்கும் ஒவ்வொருவரும் இந்த மேன்மையை உணரலாம்.







Reviews
There are no reviews yet.