Description
ஒருவரியில் முடிந்துபோகும் இந்தக் கவிதையின் வீச்சு, ஓராயிரம் எண்ணங்களையும் அக உணர்வுகளையும் கொண்டு சேர்த்துச் சிரிக்கிறது. வாழ்வின் முக்கிய உரையாடல்களை முடித்துவைக்கும் அல்லது ஆரம்பித்து வைக்கும் அந்த ஒரு வார்த்தையை உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? தேடியிருக்கிறீர்களா? ஒரு நல்ல கவிதையைச் செதுக்கி மலைஉச்சியில் வைக்கும் அக்கவிதைக்கான வார்த்தையை கவிஞனொருவன் தன்னுடைய சொல் அம்பறாத்தூணியில் தேடும் வலி அறிவீர்களா? அதைத் தேடும்போது அதுகிடைத்தால் அல்லவா அக்கவிதை உருவாகித்தொலைக்கும்? இல்லையேல் அதற்காகக் காத்திருப்பதைத்தவிர நல்ல கவிதையை எப்படி உருவாக்குவது?
அவ்வகையில் “மாயா, மது மற்றும் உதயாவுடனான” ஒற்றைஉரையாடல்களின் சிறுகவிதைவரிகளில், ஞானேந்திரியமாகவும் கர்மேந்திரியமாகவும் கொள்ளப்படும் ‘மனம்’ என்பதன் வாழ்வியல் கண நிலைகளை, வார்த்தைகள் என்னும் சிறுவரிக்காம்பில் சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கியதாய்க் கொடுத்திருக்கும் தம்பி, கவிஞர் பாண்டித்துரைக்கு என்னுடைய அன்பும் பிரியமும் முத்தங்களும்.
எம்.கே.குமார்
சிங்கப்பூர்







Reviews
There are no reviews yet.