Availability: In Stock
‘புதிய இந்தியா எனும் கோணல் மரம்.
₨ 2,190.0 Original price was: ₨ 2,190.0.₨ 1,995.0Current price is: ₨ 1,995.0.
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. 2014 மே மாதத்தில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியது, அல்லது அப்படிக் கூறப்பட்டதா? உள்ளபடியாக, நெருக்கடியைத்தான் இந்தியா எதிர்கொண்டுள்ளது. நம்முடைய ஆட்சியமைப்பு, சமூகம், பொருளாதாரம் என அனைத்தும் நொறுங்கிப்போய்விட்டன. அதற்கான அறிகுறிகளெல்லாம் நம்மைச் சுற்றியே இருக்கின்றன.’
24/7 வேலைபார்த்துவந்த டிஜிட்டல் ராணுவமும் சமரசத்துக்கு ஆட்பட்ட ஊடகங்களும் ஆளுங்கட்சிக்கு ஆதரவான கூச்சல்களால் பொதுத் தளங்களை மூழ்கடித்துக்கொண்டிருந்த வேளையில், துணிவுமிக்க விமர்சனக் குரலால் அதிகாரத்திடம் உண்மையைப் பேசும் உறுதியோடு இருந்தார் பரக்கலா பிரபாகர். 2020 முதல் 2023 வரை ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக எழுதிவந்த இந்தக் கட்டுரைகளில், அவர் உண்மைகளையும் தரவுகளையும் உன்னிப்பாகக் கவனித்து, நிகழ்வுகளையும் பொது அறிக்கைகளையும் பகுப்பாய்வு செய்து, நம்முடைய ஜனநாயகம், சமூக நல்லிணக்கம், பொருளாதாரம் ஆகியவற்றின் எதிர்காலம் குறித்து அவர் ஏன் அச்சப்படுகிறார் என்பதை எடுத்துவைக்கிறார்.
Reviews
There are no reviews yet.