Availability: In Stock
பாபாசாகேப்பின் பதிப்புலகம்: அறிவு மரபும் அதிகாரப்படுத்தலும்.
₨ 825.0 Original price was: ₨ 825.0.₨ 750.0Current price is: ₨ 750.0.
பாபாசாகிப் அம்பேத்கரின் அறியப்பட்ட அடையாளங்களைத் தாண்டி “இதழாளர் அம்பேத்கர்” என்னும் பக்கத்தைத் திறந்து காட்டுகிறது இந்நூல். வாழ்ந்தபோதும் பின்னரும் ஊடகங்களால் பெருமளவு புறக்கணிக்கப்பட்ட அம்பேத்கரே ஊடகராகச் செயல்பட்டது வரலாறு. அம்பேத்கரின் சிந்தனை வெளிப்பாட்டிற்கும் செயல்பாடுகளுக்கும் ஊன்றுகோலாக இருந்த இதழியல் பணிகள் பற்றித் தமிழில் இதுவரை வெளிவராத தகவல்களைக் கொண்டு அறிமுகம் செய்திருக்கிறார் பா. பிரபாகரன்.
அதிகம் படித்து, அரசியலில் நுழைந்த அம்பேத்கர் அன்றாடத்தோடு போராடிக்கொண்டிருந்த எளிய மக்களிடையே செயல்பட வேண்டியிருந்தது. இதழியலும் அன்றாடத்தோடு தொடர்புடையதுதான். அவருடைய நீண்ட கால நோக்கையும் அது அன்றாடத்தில் ஊடாடி முன்னகர்ந்த விதத்தையும் புரிந்துகொள்ள இந்நூல் உதவுகிறது.
இந்திய ஊடகங்களில் தலித்துகளின் இடத்தைப் பொதுவான கேள்வியிலிருந்து தொடங்கும் நூல் அம்பேத்கரின் இதழியல் என்னும் குறிப்பான பொருளில் ஆழம் கண்டிருக்கிறது. தான் செயல்பட்ட காலத்தில் மற்றவர்களின் பார்வைக்குத் தெரியாத நுட்பங்களை அம்பேத்கர் நடத்திய இதழ்களின் சாரத்தைச் சொல்லுவதன் வழி விவரிக்கிறது இந்நூல். அம்பேத்கரைப் பற்றிய முழுமையை நோக்கிச் செல்லவும், முழுமையின் மத்தியில் வைத்து அவரைப் புரிந்துகொள்ளவும் இந்நூல் உதவும்.
Reviews
There are no reviews yet.