Description
இரு நூற்றாண்டு கால உயர்கல்விப் புலமை மரபு கொண்ட யாழ்ப்பாணத்திலிருந்து சமூக விஞ்ஞானிகளும் மானிடப் புலமைசார் அறிவுஜீவிகளும் பெருமளவில் உருவாகவில்லை என்பது புலமை வானில் தென்படும் இருள்மேகமாகத் தெரிகிறது. தமிழர் தாயகப் பிரதேசத்தின் சமூகவியல், கிராமியப் பொருளாதாரக் கட்டமைப்பு, சாதிய அமைப்புமுறை, திருமண முறைமைகள் காலந்தோறும் புலப்பெயர்வு, காலனிய வாழ்வியல், அரசியல் எழுச்சிகள், கருத்தாடல்கள், தமிழ்த் தேசிய எழுச்சி போன்ற பல்வேறு சமூகப் பண்புகள் குறித்து பெருமளவு புலமை ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த ஆய்வறிவுப் புலமையின் வெறுமை தென்னிலங்கை குறித்து வெளியாகும் புலமை ஆய்வுகளின் வெளிச்சத்தில் துலாம்பரமாகிறது.
இலங்கையில் ஆங்கிலத்தில் கிடைக்கும் இந்த அறிவியல் கருவூலங்களைத் தமிழ் வாசகர்களுக்குத் திறந்துகாட்டும் பெரும் பணியைத் தவமே போல் செய்துவரும் யோகி க.சண்முகலிங்கம் ஆவார். அறிவுத்தேடல் கொண்ட தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்திருக்கும் பெரும் பொக்கிஷம் அவர். எழுபது ஆண்டு கால இலங்கை அரசியல் வரலாற்றின் பல்வேறு இழைகளை, பல அடுக்குகளை விபரிக்கிறார். இலங்கை அரசியலை நிர்ணயித்த முக்கிய போக்குகளை அதன் வரலாற்று, கருத்தியல் பின்னணியில் விபரிக்கும் சிறந்த கட்டுரைகளை இந்த நூல் கொண்டுள்ளது.







Reviews
There are no reviews yet.