Description
லக்ஷ்மி.
Original price was: ₨ 740.0.₨ 675.0Current price is: ₨ 675.0.
வேறு பக்கம் பார்ப்பது போல அவள் நின்று கொண்டிருந்தாள். ஆனாலும் ஆவலைக் கட்டுப்படுத்த முடியாது மெள்ள திரும்பிப் பார்த்தாள். அந்த மனிதனும் அவளை அதிசயமாக மீண்டும் பார்ப்பதைக் கண்டாள். இனம்விளங்கா ஒரு அச்சம் மறுபடியும் அவளை ஆட்கொள்ள, நெஞ்சு வேகமாகத் துடிக்க உடம்பு மெல்ல நடுங்கியது. பட்டப் பகலில் என்னத்துக்கு பயப்படணும்? யார் இவன்? பார்வையால் முழுங்கிவிடுவானா? தன்னையே கடிந்து கொண்டு கீழ் உதட்டை அழுத்திக் கடித்துக்கொண்டு அசையாமல் பிடிவாதமாக மேலே நடக்காமல் அங்கேயே நின்றாள்.சுள்ளென்று வெயில் முகத்தில் எரிச்சலுடன் வீசியது.வட்ட வடிவமான அகலப்படிகள் மீது டக்டக் என்று பாதணிகள் ஒலிக்க அவர் வேகமாக ஏறி வந்தார். சற்று பருமனான சரீரம்.
Reviews
There are no reviews yet.