Availability: In Stock
தெளிவத்தை ஜோசப் கதைகள்.
₨ 2,475.0 Original price was: ₨ 2,475.0.₨ 2,250.0Current price is: ₨ 2,250.0.
தெளிவத்தை ஜோசப்பின்
சிறுகதைகள் அனைத்தையும் தொகுத்து, முழுமையான தொகுப்பு ஒன்றினைக் கொண்டுவரும் முயற்சி பத்தாண்டுகளுக்கு முன்னர் ஆரம்பமானது. 1979இல் யாழ்ப்பாணத்திலிருந்து வைகறை வெளியீட்டின் மூலம் தெளிவத்தை ஜோசப்பின் முதலாவது சிறுகதைத் தொகுப்பினை ‘நாமிருக்கும் நாடே’ என்ற தலைப்பில் வெளியிட்டதன் நீட்சி போலவும் இது அமைந்தது. ‘நாமிருக்கும் நாடே’ என்ற தொகுப்பிற்காக அப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களாக இருந்து பேருழைப்பை நல்கிய சிவம் கமலநாதன், எஸ்.பாலசுப்ரமணியம் ஆகியோரின் மறைவினைக் கண்ணீரோடு நினைவு கூருகிறேன். அவுஸ்திரேலியாவில் வாழும் மூக்கையா நடராஜா, கனடாவில் வாழும் வி.தேவராஜ் ஆகியோர் இன்றும் எம் முயற்சிக்குத் தொடர்ந்து ஊக்கம் தந்து வருகின்றனர்.
தன்னை நாடி வரும் அனைத்து எழுத்தாளர்களுக்கும், அவர்களின் கைவசம் இல்லாத கதைகளை எல்லாம் தனது சேகரத்திலிருந்து தேடிக்கொடுத்துதவிய தெளிவத்தை ஜோசப் அவர்களிடம் அவர் எழுதிய கதைகளே இல்லாமல்போனது துரதிர்ஷ்டவசமானது.
Reviews
There are no reviews yet.