Description
அ.யேசுராசா
மனித வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை உண்மைத்தன்மையுடன் – திரைப்பட அழகியல் அம்சங்களைப் பேணி, கலாரூபமாகப் படைக்கப்படுபவையே கலைத்திரைப்படங்களாகும். ‘மனிதன்’ பற்றிய அக்கறையே அவற்றின் உள்ளுறையாகும்; இலாபநோக்கை அவை கருத்தில் எடுப்பதே இல்லை.
திரைப்படம், ஓவியம், நாடகம் போன்றவை சிங்கள மக்களிடையில் மகத்தான வளர்ச்சியடைந்திருக்கின்றன. குறிப்பாகத் திரைப்படத்தினை எடுத்துக்கொண்டால், அவர்களை நாம் அணுகவே முடியாது.
பிரச்சாரப் பண்பு மேலோங்கியவை இருந்தாலும் பிறிதொரு பக்கத்தில் ‘காற்றுவெளி’, ‘முகங்கள்’, ‘நேற்று’ முதலிய கலைத்துவப் படைப்புகள் பல உருவாக்கப் பட்டுள்ளன. ஞானரதன் என்ற எமது முக்கிய நெறியாளர், ‘நிதர்சனம்’ அமைப்பின் ஊடாகவே தனது படைப்பாளுமையைச் சிறப்புடன் வெளிப்படுத்த முடிந்திருக்கிறது.
அலைதல்களில், நிராசை உழல்வுகளில் தன் தேடலை அறிதலின் சோகம் என அவன் சலிப்புற்றபோதும், அவநம்பிக்கை நாடகத்தின் செய்தியாவதில்லை. பரிதாபகரமானவனாய் அவன் ஸ்தம்பித்துப் போவதையல்ல, வாழ்தலை – வாழ்க்கையை வாழ்ந்து கடப்பதைத்தான் – முன்நோக்கிய இயங்குதலைத்தான் செய்தியாக்கி நாடகம் முடிகிறது.







Reviews
There are no reviews yet.