Description
றெஜி சிறிவர்த்தன (1922-2004) இலங்கையின் மிக முக்கியமான சிந்தனையாளர்களுள், ஆய்வறிவாளர்களுள் ஒருவர் மார்க்சியக் கோட்பாட்டிலும் வரலாற்றிலும் ஆழ்ந்த புலமை உடையவர், மனித உரிமைச் செயற்பாட்டாளர், சிறந்த கவிஞர், நாவல், நாடக ஆசிரியர், கலை இலக்கிய விமர்சகர். றெஜியின் இந்த நூல் அவருடைய இளமைக்கால அரசியல் வாழ்க்கை பற்றிய ஒரு பதிவாக அமைவதோடு, சமகால இலங்கை வரலாற்றைப் பொறுத்தவரை அதைவிட ஒரு முக்கியமான ஆவணமாகவும் அமைகிறது. இந்நூல் லங்கா சமாசமாஜக் கட்சியின் ஆரம்பகால வரலாற்றைக் கூறுகின்றது.
கட்சியிலிருந்து வெளியேறி சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், அரசியல் முதிர்ச்சியும், சிந்தனை முதிர்ச்சியும் பெற்ற தன் முதுமைக்காலத்தில், தனது 75ஆவது வயதில், பின்னோக்கிப் பார்த்து தன் நினைவுகளைக் கிண்டிக்கிளறி, விருப்பு வெறுப்பு இன்றி பதிவு செய்திருக்கிறார். எஸ். கே. விக்னேஸ்வரனின் மொழிபெயர்ப்பில் இப்போது வெளிவரும் இந்த நூல், நீண்ட காலத்துக்குப் பின்னர் தமிழில் வெளிவரும் றெஜியின் இரண்டாவது நூலாகும்.







Reviews
There are no reviews yet.