Description
அப்துல் வாகிது. முஹ்சீன்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், திருகோணமலை மாவட்டத்தில், முதூரில் பிறந்தவர். அரசாங்க ஆசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். 1990களிலிருந்து எழுதி வருகிறார். எழுதுவதோடு பல்வேறு தளங்களிலான ஆய்வு முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார். ஏற்கனவே “சோனக தேசம்”, “இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம்”, “ஜனநாயகம்”, “பாடசாலை உள்வியல்”. “அசன்பேயுடைய கதை ஓர் மீள்வாசிப்பு” போன்ற ஆய்வு நூல்களையும் இங்யும் ஒரு மஹ்சர் என்ற சிறுகதைத் தொகுதியையும் எழுதியுள்ளார். இப்பொழுது மொழிபெயரப்பும் துறையிலும் ஈடுபட்டிருக்கிறார். “அடையாளம் பதிப்பாக வெளிவந்துள்ள ‘வரலாற்றில் இஸ்லாம்” என்ற நூல் இவருடைய முதலாவது மொழிபெயர்ப்பு நூலாக அமைகிறது.
தவறான புரிதலானது இரு பக்கங்களைக் கொண்டுள்ளது. ஒன்று முஸ்லிம்களைப் பற்றி, ஏனைய சமூகங்கள் மத்தியில் நிலவுகின்ற தவறான அபிப்பிராயங்கள், இரண்டு முஸ்லிம்கள் தம்மைப் பற்றிக் கொண்டிருக்கின்ற தவறான அபிப்பிராயங்கள். இந்நூல் இந்த இரண்டையும் பற்றி பேசுகிறது. இலங்கைச் சூழலில், முஸ்லிம் எதிர்கொள்கின்ற நெருக்கடிகளின் பின்னணியில் எழுதப்பட்டுள்ள இந்நூல் இலங்கையைத் தாண்டி, உலக அளவில் முஸ்லிம் சமூகங்கள் அக்கறை கொள்ள வேண்டிய விடயங்கள் பற்றியும் பேசுகிறது.
கலந்துரையாடப்படவும் விவாதிக்கப்படவும் கூடிய பல விடயங்களை இந்நூல் கொண்டிருக்கிறது. தேசிய அளவிலும் உலகளாவிய ரீதியிலும் சமூகங்களின் ஐக்கியம் மிகப் பெருமளவில் அவசியமாகியுள்ள இன்றைய நிலையில், இந்நூல் அத்தகைய ஐக்கியம் பற்றி மேலும் அக்கறை கொள்வதைத் தூண்டுகிறது.”







Reviews
There are no reviews yet.