Description
-தமிழ் உதயா
கவிதை ஒரு கண்டடைதலை மட்டுமல்ல, அது ஒரு கவிதையின் மேலான பகுதிதான் என்றாலும், வாழ்வின் உயிர்ப்பையும், வலியையும் அதற்கும் மேலாகத்தான் அன்பு என்னும் மகத்தான ஓர் ஒத்திசைவின் உயிர்வேட்கையையும் கொண்டது. அந்த உக்கிர மனவெழுச்சியையே படிமங்களாக வெளிப்படுத்தியிருக்கிறார் தமிழ் உதயா.
அரூப ஒவியம் போன்ற ஒவ்வொரு தீட்டல்களுக்கும் இயற்கையின் ஒரு சித்திரமே -ஆதாரமாய் அமைந்திருக்கிறது இவர் கவிதைகளில். ஒவ்வொரு கவிதையின் முடிவிலும் கவிஞர் ஒருமை நோக்கிய ஒரு காதலை விளித்திருப்பது தொகுப்பிற்கு ஒரு காவிய உயர்வை வழங்கியிருக்கிறது. எளிய பக்திக் கவிதைகளோடு இவற்றை ஒப்பிடவே கூடாது. நிச்சயமாக இவை அவற்றிற்கு அப்பாலானது. உண்மையும் மேன்மையும் மிக்கது.
– கவிஞர் தேவதேவன்







Reviews
There are no reviews yet.