Availability: In Stock
வெற்றிக்கு வேண்டும் தன்னம்பிக்கை.
₨ 1,285.0 Original price was: ₨ 1,285.0.₨ 1,165.0Current price is: ₨ 1,165.0.
உங்களுக்கு வெற்றிபெற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.
அதற்கு நிறையத் தன்னம்பிக்கை இருக்க வேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
அதற்காக வெறுமனே காதால் கேட்கும் உபதேசமாகவே தன்னம்பிக்கை பற்றிக் கூறிக் கொண்டிருந்தால் உங்களுக்குச் சலிப்புதான் ஏற்படும். அதனால் நீங்கள் பின்பற்றிப் பார்க்கக்கூடிய பல வழிகளை இங்கே சொல்லி இருக்கிறோம்.
நீங்களே ஒரு புதுக் கருவியைக் கண்டுபிடித்துப் பயன்படுத்த வேண்டி இருக்கிறது என்றால் அதற்கு உங்களுக்கு நீண்டகால அவகாசம் தேவை. அதற்கு உழைப்பும் மிகுதியாகத் தேவைப்படும்.
அதுவே ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட சாதனம் ஒன்றைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டால் வெகு எளிதில் அதன் பலன்களை அடைவீர்கள். இந்தப் புத்தகம் தயார் நிலையில் கிடைக்கும் அந்தச் சாதனம் போன்றது. நீங்கள் உழைத்துப் புதிதாக இதைக் கண்டுபிடிக்கத் தேவையில்லை.
சுருக்கமாகச் சொல்வதானால் சமைத்து மேசை மேல் வைக்கப்பட்டிருக்கும் உணவு இது. அதை எடுத்துச் சாப்பிட வேண்டியது உங்கள் பொறுப்பு. இதைப் படிக்க ஆரம்பித்த உடனேயே உங்கள் சாதனைப் பயணம் தொடரும்.
Reviews
There are no reviews yet.