Description
தேர்வும் தொகுப்பும் – ந. முருகேசபாண்டியன்
கதைசொல்லியான வேல ராமமூர்த்தி புனைந்திடும் உலகு, கொந்தளிக்கிற உணர்ச்சிகளின் தொகுப்பாகும். இவர் ஒரு நிகழ்ச்சியை விவரிக்கும்போது, உணர்ச்சிவயப்பட்ட நிலையில் கதைக்குள் மூழ்கிவிடுகிறார். ஏற்கனவே நடைபெற்ற சம்பவத்தின் விளைவுகள், அவருக்குள் ஏற்படுத்தியுள்ள அனுபவங்களைப் பரபரப்பான மொழியில் கதைகளாக்கியுள்ளார், வேட்டைச் சமூகத்தின் மனநிலையில் இன்றும் சின்ன விஷயத்திற்காக ஆயுதமேந்தும் மனநிலையுடைய கிராமத்து மனிதர்களின் நடப்பு வாழ்க்கையை எளிதில் புறக்கணிக்க இயலாது. ஆதி சமூகத்தினரின் நிழல்களாக நடமாடுகிற மனிதர்கள்பற்றிய வேல ராமமூர்த்தி சித்திரிக்கும் கதைகள், வெறும் புனைவுகள் அல்ல. வெக்கையடிக்கும் மண்ணிற்கே உரிய வாழ்க்கையைப் பதிவாக்கியுள்ள இவரின் எழுத்து. பிசிறாக இருப்பது இனவரைவியல் தன்மைக்குரியது.







Reviews
There are no reviews yet.