Description
எந்தவிதத் தீங்கும் இல்லாத அமிர்தம் போன்ற உணவாகிலும் அதனையும் அளவோடு உண்பவன் உடலுக்கு நோய்கள் ஏற்படாது. இதனால் அவனது உயிருக்கும் எந்தவிதப் பாதிப்புமில்லை என்கின்றார் திருவள்ளுவர். இக்குறளினை அடியொற்றி யாழ்ப்பாணத்துச் சித்தமருத்துவர் இருபாலைச் செட்டியார் இயற்றி யாழ்ப்பாணத்தின் ஏழாலை எனும் ஊரைச்சேர்ந்த சித்தமருத்துவர் ஐ. பொன்னையா பிள்ளை அவர்களால் 1927 இல் பதிப்பிக்கப்பெற்ற வைத்திய விளக்கம் என்னும் ‘அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி’ என்னும் நூலில் உள்ள உணவு வகைகளை அடிப்படையாகக்கொண்டு ‘மாறுபாடில்லா உண்டி’ என்னும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.இந்நூலில் குறிப்பிட்டுள்ள கருத்துகள் நாம் நோயணுகாது வாழ்வதற்கு உதவும். எனினும், ஒவ்வொருவரும் தனிப்பட்டரீதியாக அவரவர் உடலமைப்பு, உடற் தொழிற்பாடு, நோய்நிலைகள் என்பவற்றுக்கு ஏற்ப மருத்துவர்களின் ஆலோசனையுடன் செயற்படுதலும் வேண்டும்.





Reviews
There are no reviews yet.